×

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தனது குரலை மாற்றி வெளியிட்ட போலி விடியோவை பரப்புகின்றனர்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு

கவுகாத்தி: தன்னைப் பற்றி போலி வீடியோவை காங்கிரஸ் பரப்புவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். ஒடிசா மாநிலம் கவுகாத்தியில் அமித்ஷா பேசினார் அப்போது பேசிய அவர், இரண்டு கட்ட தேர்தல்களுக்குப் பிறகு, எங்களின் உள் மதிப்பீட்டின் அடிப்படையில், பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 100 இடங்களை தாண்டிவிட்டன . ‘400 பார்’ என்ற எங்களின் தீர்மானத்தை நோக்கி நாங்கள் நகர்கிறோம் என்று நம்புகிறோம். ஆரம்பப் போக்குகளின்படி, தென்னிந்தியாவில் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 400 இடங்களை கடந்த பின், இடஒதுக்கீட்டை பா.ஜ., முடிவுக்கு கொண்டு வரும் என காங்கிரஸ் தவறான தகவல்களை பரப்புகிறது.

இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதாக என்னைப் பற்றி போலி வீடியோவை காங்கிரஸ் பரப்புகிறது. இவை ஆதாரமற்றவை, உண்மையற்றவை.. எஸ்.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர் பா.ஜ.க என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒபிசி, பட்டியலின, பழங்குடியின இட ஒதுக்கீட்டை பாஜக என்றுமே ஆதரிக்கும். மத ரீதியான இட ஒதுக்கீட்டை மட்டுமே எதிர்ப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். காங்கிரஸ் விரக்தியின் அளவு என்னையும் பல பாஜக தலைவர்களையும் போலியான வீடியோக்களை பரப்பிவிட்டனர். போலி வீடியோவை வைத்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தனது குரலை மாற்றி வெளியிட்ட போலி விடியோவை பரப்புகின்றனர்.

இந்திய அரசியலில் எந்த ஒரு பெரிய கட்சியும் ஒருபோதும் செய்யக்கூடாது என்றும் நான் நம்புகிறேன் என அமித்ஷா தெரிவித்தார். எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ‘ஆபாச வீடியோ’ வழக்கு குறித்து அமித்ஷா கூறுகையில், நாட்டின் ‘மாத்ர் சக்தி’யுடன் நாங்கள் நிற்கிறோம் என்பது பாஜகவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. காங்கிரஸிடம் நான் கேட்க விரும்புகிறேன், யாருடைய அரசாங்கம் உள்ளது? காங்கிரஸ் கட்சியின் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை.

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் விவகாரத்தில் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிருக்கு எதிரான குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தார். இதுபோன்ற வழக்குகளில் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாஜக மகளிருக்கு ஆதரவாக நிற்கும் எனவும் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

The post காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தனது குரலை மாற்றி வெளியிட்ட போலி விடியோவை பரப்புகின்றனர்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,Union minister ,Amit Shah ,Guwahati ,Union Home Minister ,Guwahati, Odisha ,BJP ,
× RELATED பாஜக ஆட்சியை காட்டிலும் காங்கிரஸ்...